BEING DILLIWALA :
முதலாமாண்டு மாணவர்கள், ஆங்கிலம் படிக்கும் இசிட்டா பாஸ்ரிச்சாவும், நிர்வாக பொருளாதாரம் பயிலும் ரோஹன் குமாரும், டெல்லியின் மறந்து போன பாரம்பரியம், கலாச்சாரம், உணவு போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்காக திட்டமிட்டு உருவாக்கியதுதான் ''BEING DILLIWALA'' . அவர்கள் முதலாவது தங்கள் பக்கத்தை முகநூலில் ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னர், 3000 விருப்பங்களோடு இரு நாட்களில் வலைப்பூ பக்கத்தை ஒரு பயணிக்கு தேவையான அனைத்து தகவல்களுடனும் வடிவமைத்திருக்கிறார்கள்.பின்னர் பாரம்பரியம், உணவு குறித்து மெக்ராலி தொல்லியல் பூங்காவிற்கு சென்று அறிந்துள்ளனர். பாரம்பரிய இடங்கள் மற்றும் உணவு குறித்து எழுதுவதற்காக தங்கள் எழுத்தாளர் குழுவையும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து புகைப்பட கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்,பயண விரும்பிகள், உணவு விரும்பிகள் அவர்களோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களோடு பல மாணவ உறுப்பினர்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
BAKING BEAUTY :
சான்யா சற்குரு டீன் ஏஜராக இருந்தபோது கேக் தயாரிக்க ஆரம்பித்தார். அவரது நண்பர்கள் அவரை வாழ்த்தியதோடு தங்களுக்கும் கற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இவ்வாறு தொடங்கியது அவரது சமையற்கலை பயணம்.
அவருடைய தோழிகளில் ஒருவர் அவருடைய சகோதரியின் பிறந்தநாளுக்கு ஒரு கேக் செய்து தருமாறு கேட்டார். அதுவே அவரது BAKED BEAUTY ன் முதல் ஆர்டர். இது கொடுத்த ஊக்கத்தால் மேலும் பல கேக்குகள் செய்து கொடுக்க ஆரம்பித்தார். வேகமாக அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. தற்போது முறையான பணிக்கூடத்துடன் டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளுக்கு ஆன்லைன் பேக்கரி ஷாப் நடத்தி வருகிறார்.
இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த மசாலா சாய் கேக், குளோப் ஜாமுன் கேக், போன்ற விருப்பமான கேக் பட்டியலையும் அறிமுகப்படுத்தி, கேக் செய்வதற்கான பயிற்சியும் வழங்குகிறார்.
தற்போது இளங்கலை நிர்வாக மேலாண்மை முடித்துவிட்டு முதுகலை மேலாண்மை படித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் பெரிய அளவில் உருவாக்ககூடிய சொந்த நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.
தீக்ஷா டெரி எழுதி தி இந்து எஜுகேஷன் ப்ளஸ் இணைப்பிதழில் வெளியான கட்டுரை