ஊழல் மற்றும் கருப்பு பணத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்க தற்போது புழக்கதில் இருக்கும் ரூ.500, ரூ.1000 தாள்கள் நவம்பர் 8,2016 நள்ளிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெறிவித்தார். அதாவது இந்த நோட்டுகள் நள்ளிரவு முதல் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்தார்.
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களின் ஒரு நாள் விடுமுறைக்கு பின்பு செல்லாத நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் நவம்பர் 10,2016 வியாழக்கிழமை முதல் ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது?
பிரதமர் மோடி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சிக்கு வந்த போதே கருப்பு பணத்துக்கு எதிராக
போரிடுவதாக உறுதியளித்தார். இந்திய பொருளாதாரத்தை பிளவுபடுத்தும் கருப்பு பணத்தை ஒழித்து நிலையான பொருளாதாரத்தை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்றார். இது வரி - மொத்த உள்நாட்டு உற்பத்தி (Tax to Gross Domestic Product) விகிதம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது காணப்பட்டது. 2011 மற்றும் 2016 ம் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 30% வளர்ந்த போது பணப்புழக்கம் 40% அதிகரித்தது ஆயினும், ரூ.500 தாள்களின் புழக்கம் 76% ஆகவும் மற்றும் ரூ.1000 தாள்கள் 109% ஆக அதிகரித்தது. அதாவது, அதிக மதிப்புள்ள கருப்பு பண பதுக்கலின் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற முடிவு பல தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலும் இதன் மூலம் பல ஆண்டுகளாக இந்திய வணிக சந்தையை அச்சுறுத்தி வந்த கள்ள நோட்டுகளுக்கு முடிவு கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் உளவு அமைப்புகள் கள்ள நோட்டுக்களை அச்சடித்து இந்திய சந்தையில் புழக்கத்தில் விட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரூ.500 ,ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு இந்தியாவின் பணமில்லா பொருளாதாரத்தை (Cashless Economy) நோக்கிய உந்துதலாகவும் உள்ளது. ''இந்த ஒரு முடிவு மக்கள் அவர்களுடைய பணத்தை செலவு செய்யும் மற்றும் வைத்திருக்கும் முறையை மாற்றும்'' என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.[full_width]