Sunday, March 5

மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய காணொளி

Augustin
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

 ஹைட்ரோகார்பன் மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்த காணொளி விவரிக்கிறது :


Friday, January 27

மாற்றத்தை விதைத்த மாணவர் போராட்டம் ...

Augustin
சமூக வலைத்தளம் மூலமாக சில நூறு மாணவர்களாக கூடிய கூட்டம் மாபெரும் கட்டுக்கடங்காத திரள் கூட்டமாக மாறி அறவழிப்போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை உடைத்து எறிந்தது.

இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டது . அவற்றில் முக்கியமானது வெளிநாட்டு குளிர்பானங்களை பயன்படுத்தக்கூடாது என்பது. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கம் மார்ச் 1 ஆம் தேதி முதல் பெப்சி , கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படாது என அறிவித்துள்ளது.

pepsi coke

தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளிலும் பெப்சி , கோக் போன்ற உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும்  பானங்களுக்கு பதிலாக இளநீர் போன்றவை விற்கப்படும் என அறிவித்துள்ளனர் .

இந்த அறிவிப்பு வெளியானது முதலே பெப்சி , கோக் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது . பெப்சி நிறுவனம் தமிழகத்தில் 60 சதவீத
சந்தையை கொண்டிருந்தது . அவற்றிற்கு ஏற்பட்ட தடையால் உள்ளூர் குளிர்பான தயாரிப்புகளான Bovonto , Torino ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 torino bovonto
Bovonto , Torino
 மக்கள் இயற்கையான பொருட்களை நாட தொடங்கி விட்டார்கள் . இனி விவசாய தொழில்கள் மேம்படும் என உறுதியாக நம்பலாம். 

மாற்றத்தை விதைத்த மாணவர்கள் உலகத்திற்கு ஆசான்கள்...




இயற்கை பானங்கள்
[full_width]

Tuesday, January 17

பொங்கி எழுந்தது தமிழகம்...

Augustin
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்ககோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திரண்ட தமிழர்கள்...

அலங்காநல்லூரில் கூடிய ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் குரல் கொடுத்த தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த சிறுமி

சென்னை மெரினாவில் கூடிய இளைஞர்கள்

மெரினாவில் போராட்டத்தின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டதால் செல்போன் ஒளியில் மாணவர்கள்

மதுரை தமுக்கத்தில் இளைஞர்கள்

கோவை வ.உ.சி திடலில் கூடிய இளைஞர்கள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போரட்டத்திற்காக கூடிய இளைஞர்களுக்கு உணவு வழங்கிய உள்ளூர் பாட்டி