பதஞ்சலி - போலி?


பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு, உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நீதிமன்றம் 11 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
வேறு நிறுவனத்தின் தயாரிப்புகளை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் போன்று  சித்தரித்து விளம்பரப்படுத்தியுள்ளதாக  பதஞ்சலி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, பதஞ்சலி மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதஞ்சலி நிறுவனத்தின் தேன், உப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்ததில், இந்த பொருட்கள் தர சோதனையை தோல்வி அடைந்தன. இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பதஞ்சலி - போலி? பதஞ்சலி - போலி? Reviewed by Augustin Abraham on December 15, 2016 Rating: 5

Popular Content