Thursday, December 15

பதஞ்சலி - போலி?

Augustin

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு, உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நீதிமன்றம் 11 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
வேறு நிறுவனத்தின் தயாரிப்புகளை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் போன்று  சித்தரித்து விளம்பரப்படுத்தியுள்ளதாக  பதஞ்சலி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, பதஞ்சலி மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதஞ்சலி நிறுவனத்தின் தேன், உப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்ததில், இந்த பொருட்கள் தர சோதனையை தோல்வி அடைந்தன. இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, December 9

ஸ்மார்ட் ஷாப்பிங் - Amazon Go

Augustin


ஆன்லைன் விற்பனையில் முண்ணணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தற்போது Amazon Go என்ற புதிய ஸ்டோர்களை அறிமுகப்படுத்தவுள்ளது.  இந்த Amazon Go ஸ்டோர்கள் Computer Vision மற்றும் உணர் தொழில்நுட்பம் (Sensors) மூலம் இயங்கக்கூடியது. எனவே வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. Amazon Go ஸ்டோரில் ஷாப்பிங் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் அமேசான் அக்கவுண்ட், ஸ்மார்ட் போன் மற்றும்  Amazon Go App வைத்திருந்தால் போதும்.இதன் மூலம் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவுள்ளது.

Amazon Go Store இயங்கும் விதம் பற்றி அமேசான் வெளியிட்டுள்ள வீடியோ :

Thursday, November 24

பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி இந்தியா

Augustin

பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8, 2016 நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் வங்கியில் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்டசில்லரை தட்டுப்பாட்டினால் சிறு, குறு வணிகர்கள், வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், Paytm மொபைல் வாலட் நிறுவனம் தனது மொபைல் செயலியில் (App) கடை உரிமையாளர்கள் பணத்தை வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுதியுள்ளது.


இந்த புதிய வசதியினால் இனி Swipe மெஷின்கள் தேவையில்லை. தற்போது 7 லட்சம் வர்த்தகர்கள், 14.8 லட்சம் Point Of Sale மெஷின்கள், 74 கோடி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பணத்தை செலுத்த வாடிக்கையாளர் Paytm கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
விற்பனையாளர் செலுத்த வேண்டிய தொகையை உள்ளீடு செய்த பின்பு வாடிக்கையாளர் தனது கார்டு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஓ.டி.பி எனப்படும் One Time Password அவரது மொபைல் எண்ணிற்கு வரும். (வழக்கமான ஆன்லைன் பரிவர்த்தனைகளை போல).

வாடிக்கையாளர் பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாடிக்கையாளர் பதிவு செய்த கார்டு விவரங்கள் Paytm செயலியில் இருக்காது மாறாக வங்கியின் வலைத்தளத்தில் இருக்கும் என Paytm தெரிவித்துள்ளது.  

Wednesday, November 23

கருப்பு பணத்துக்கு எதிரான போராட்டம்

Augustin

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8,2016 நள்ளிரவு ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பெரும் அளவிலான கருப்பு பணத்தை களையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் மற்றும் கருப்பு பணத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்க தற்போது புழக்கதில் இருக்கும் ரூ.500, ரூ.1000 தாள்கள் நவம்பர் 8,2016 நள்ளிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெறிவித்தார். அதாவது இந்த நோட்டுகள் நள்ளிரவு முதல் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்தார்.

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களின் ஒரு நாள் விடுமுறைக்கு பின்பு செல்லாத நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் நவம்பர் 10,2016 வியாழக்கிழமை முதல் ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

பிரதமர் மோடி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சிக்கு வந்த போதே கருப்பு பணத்துக்கு எதிராக
போரிடுவதாக உறுதியளித்தார். இந்திய பொருளாதாரத்தை பிளவுபடுத்தும் கருப்பு பணத்தை ஒழித்து நிலையான பொருளாதாரத்தை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்றார். இது வரி - மொத்த உள்நாட்டு உற்பத்தி (Tax to Gross Domestic Product) விகிதம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது காணப்பட்டது. 2011 மற்றும் 2016 ம் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 30% வளர்ந்த போது பணப்புழக்கம் 40% அதிகரித்தது ஆயினும், ரூ.500 தாள்களின் புழக்கம் 76% ஆகவும் மற்றும் ரூ.1000 தாள்கள் 109% ஆக அதிகரித்தது. அதாவது, அதிக மதிப்புள்ள கருப்பு பண பதுக்கலின் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற முடிவு பல தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலும் இதன் மூலம் பல ஆண்டுகளாக இந்திய வணிக சந்தையை அச்சுறுத்தி வந்த கள்ள நோட்டுகளுக்கு முடிவு கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உளவு அமைப்புகள் கள்ள நோட்டுக்களை அச்சடித்து இந்திய சந்தையில் புழக்கத்தில் விட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ரூ.500 ,ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு இந்தியாவின் பணமில்லா பொருளாதாரத்தை (Cashless Economy) நோக்கிய உந்துதலாகவும் உள்ளது. ''இந்த ஒரு முடிவு மக்கள் அவர்களுடைய பணத்தை செலவு செய்யும் மற்றும் வைத்திருக்கும் முறையை மாற்றும்'' என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
[full_width]

Tuesday, November 22

தொழில் முனைவோர் ஆகலாம் மாணவர்கள்

Augustin
கல்லூரி மாணவர்கள் சிறந்த பல எண்ணங்களை கொண்டவர்களாகவும், அதை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். பெரும் அலைகளை ஏற்படுத்திய மாணவர்களில் சிலர்...



BEING DILLIWALA :

முதலாமாண்டு மாணவர்கள், ஆங்கிலம் படிக்கும் இசிட்டா பாஸ்ரிச்சாவும், நிர்வாக பொருளாதாரம் பயிலும் ரோஹன் குமாரும், டெல்லியின் மறந்து போன பாரம்பரியம், கலாச்சாரம், உணவு போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்காக திட்டமிட்டு உருவாக்கியதுதான் ''BEING DILLIWALA'' . அவர்கள் முதலாவது தங்கள் பக்கத்தை முகநூலில் ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னர், 3000 விருப்பங்களோடு இரு நாட்களில் வலைப்பூ பக்கத்தை ஒரு பயணிக்கு தேவையான அனைத்து தகவல்களுடனும் வடிவமைத்திருக்கிறார்கள்.பின்னர் பாரம்பரியம், உணவு குறித்து மெக்ராலி தொல்லியல் பூங்காவிற்கு சென்று அறிந்துள்ளனர். பாரம்பரிய இடங்கள் மற்றும் உணவு குறித்து எழுதுவதற்காக தங்கள் எழுத்தாளர் குழுவையும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து புகைப்பட கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்,பயண விரும்பிகள், உணவு விரும்பிகள் அவர்களோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களோடு பல மாணவ உறுப்பினர்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

BAKING BEAUTY :

சான்யா சற்குரு டீன் ஏஜராக இருந்தபோது கேக் தயாரிக்க ஆரம்பித்தார். அவரது நண்பர்கள் அவரை வாழ்த்தியதோடு தங்களுக்கும் கற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இவ்வாறு தொடங்கியது அவரது சமையற்கலை பயணம்.
அவருடைய தோழிகளில் ஒருவர் அவருடைய சகோதரியின் பிறந்தநாளுக்கு ஒரு கேக் செய்து தருமாறு கேட்டார். அதுவே அவரது BAKED BEAUTY ன் முதல் ஆர்டர். இது கொடுத்த ஊக்கத்தால் மேலும் பல கேக்குகள் செய்து கொடுக்க ஆரம்பித்தார். வேகமாக அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. தற்போது முறையான பணிக்கூடத்துடன் டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளுக்கு ஆன்லைன் பேக்கரி ஷாப் நடத்தி வருகிறார்.

இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த மசாலா சாய் கேக், குளோப் ஜாமுன் கேக், போன்ற விருப்பமான கேக் பட்டியலையும் அறிமுகப்படுத்தி, கேக் செய்வதற்கான பயிற்சியும் வழங்குகிறார்.
தற்போது இளங்கலை நிர்வாக மேலாண்மை முடித்துவிட்டு முதுகலை மேலாண்மை படித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் பெரிய அளவில் உருவாக்ககூடிய சொந்த நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

தீக்ஷா டெரி எழுதி தி இந்து எஜுகேஷன் ப்ளஸ் இணைப்பிதழில் வெளியான கட்டுரை